தமிழக செய்திகள்

பொய் வழக்குகளால் அ.தி.மு.க.வினரை அசைக்க கூட முடியாது - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

பொய் வழக்குகளால் அ.தி.மு.க.வினரை அசைக்க கூட முடியாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பொய் வழக்குகளை பதிவு செய்து அ.தி.மு.க.வினரை அசைத்து கூட பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஆலமரம் போன்று ஜெயலலிதா வளர்த்துள்ளார்.

அ.தி.மு.க. என்பது உண்மை விசுவாசிகளை கொண்ட இயக்கம். எனவே, ஜெயலலிதா வாக்கை உணர்த்தும் வகையில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மக்களின் இயக்கமாக திகழும். நாளை நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்