தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் மீது கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. புகார் - தேசிய கொடியை அவமதித்ததாக குற்றச்சாட்டு

தேசிய கொடியை அவமதித்ததாக மு.க.ஸ்டாலின் மீது கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. -

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. சட்டப் பிரிவு மாநில இணை செயலாளருமான பாபு முருகவேல், நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு ஒன்றை அனுப்பிவைத்தார். அந்த புகார் மனுவில், சுதந்திர தினத்தன்று தனது கட்சி தலைமை அலுவலகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அப்போது தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்காமல் அவமதித்துவிட்டார். இது தொடர்பாக, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று பெருநகர சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது