தமிழக செய்திகள்

சொத்து தகராறில் வெட்டிக்கொலை பெயிண்டர் தலையை துண்டித்து கோவில் வாசலில் வைத்து சென்ற கொடூரம்

சொத்து தகராறில் பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தலையை துண்டித்து கொலையாளிகள் கோவில் வாசலில் வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா எலுவப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா. இவருடைய மகன் பிரதீப் (வயது 25). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சந்திரிகா, கடந்த 4 மாதத்திற்கு முன்பு 2-வது பிரசவத்திற்கு பெங்களூருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றவர் அங்கேயே உள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் பிரதீப்பை வெட்டிக்கொலை செய்து தலையை துண்டித்து அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வாசலில் வைத்து விட்டு சென்றுள்ளனர். கோவில் வாசலில் பிரதீப்பின் தலை துண்டித்து வைக்கப்பட்டு இருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விவசாய நிலத்தில் உடல்

இதுகுறித்து அவர்கள் பாகலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் உடலை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ரமேஷ் என்பவரது விவசாய நிலத்தில் பிரதீப்பின் உடல் கிடப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார், கொலை செய்யப்பட்ட பிரதீப்பின் தலை மற்றும் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்ட பிரதீப் குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான சந்தோஷ், முரளி ஆகியோர் குடும்பத்திற்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்து தகராறு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்