தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கட்டமடுவு கிராமத்தில் குட்டியானை ஒன்று விவசாயி ஒருவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு தவறி விழுந்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பல மணி போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் விழுந்த குட்டியானையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில், கிணற்றில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குட்டியானை வாகனம் மூலம் முதுமலை வன சரணாலயத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது வன ஊழியர் ஒருவர் யானையை பிரிய மனமில்லாமல் தேம்பி தேம்பி அழுதார். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.