தமிழக செய்திகள்

சின்னசேலம் அருகே பரபரப்புதொழிலாளியை கத்தியால் குத்திய வழிப்பறி கொள்ளையர்கள்பணம் இல்லை என்றதால் ஆத்திரம்

சின்னசேலம் அருகே தொழிலாளியை வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியால் குத்தினா.

சின்னசேலம்,

சின்னசேலம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் செந்தில்குமார் (வயது 50). தொழிலாளி. இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று அதிகாலை 3.50 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் செந்தில்குமார் அம்மையகரம் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்கிய போது, செந்தில்குமாரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்தனர். பின்னர், அவர்கள் பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். இதற்கு செந்தில்குமார் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், செந்தில்குமாரின் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதில் காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் போல் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்ற 2 வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்