திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வடகொளப்பாக்கம் கிராம கல்குவாரி குட்டையில் பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தை கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பிரம்மதேசம் போலீசார் குழந்தையின் சடத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்குவாரி குட்டையில் பச்சிளம் குழந்தை யார் வீசினார்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.