தமிழக செய்திகள்

வாலிபர் பிணம்

தமிழக-கேரள எல்லையில் வாலிபர் பிணம் கிடந்தது

தினத்தந்தி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக- கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் கேரளா மாநிலம் ஆரியங்காவு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு ஆற்றங்கரையில் வாலிபர் பிணம் கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தென்மலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் தென்மலை போலீசார் விரைந்து சென்று ஆற்றங்கரையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்து கிடந்தவரின் சட்டைப்பையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது, செங்கோட்டை அருகே காலங்கரை சுப்பையா மகன் அன்பழகன் (வயது 39) என்ற முகவரி இருந்தது. அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் பாரி பள்ளி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக செங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு