தமிழக செய்திகள்

குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் சாவு

சாத்தனூர் அருகே குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

தினத்தந்தி

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அருகே கண்ணக்கந்தல் கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் பூபாலன் (வயது 35), கட்டிட மேஸ்திரி.

இவரது மனைவி ரோஜா. இவர்களுக்கு நந்திதா (6) என்ற மகளும், ஹரிதாஸ் (4), சரத் (1) ஆகிய மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று எதிர் வீட்டில் பூபாலன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார் பகல் 1 மணி அளவில் மனைவியை அழைத்து வீட்டு குடிநீர் தொட்டியில் தண்ணீர் உள்ளதா என பார்க்க சொல்லி உள்ளார்.

இதையடுத்து ரோஜா குடிநீர் தொட்டியின் மேல் இருந்த இரும்பு மூடியை திறந்து பார்த்து தண்ணீ இருக்கிறது என கூறிவிட்டு வீட்டு வேலைகளை பார்க்க சென்றார்.

சிறிது நேரம் கழித்து சிறுவன் ஹரிதாசை தேடிய போது திறந்திருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூழ்கி கிடந்தான்.

உடனடியாக சிறுவனை தூக்கி கொண்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டாகள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பூபாலன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்