தமிழக செய்திகள்

பஸ் மோதி அரிசி வியாபாரி தலை நசுங்கி பலி

கடலூரில் பஸ் மோதி அரிசி வியாபாரி தலை நசுங்கி உயிரிழந்தார்.

கடலூர்,

கடலூர் பாதிரிக்குப்பம் டி.ஆர். நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜா (வயது 32). கூத்தப்பாக்கத்தில் அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் குண்டுஉப்பலவாடி மெயின்ரோட்டில் இருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வழியாக நேதாஜி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது பின்னால் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பஸ்சின் முன்சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார். இது பற்றிய புகாரின் பேரில் கடலூர்புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...