தமிழக செய்திகள்

தக்கலை அருகே மின்கம்பத்தில் கார் மோதியது பெண் படுகாயம்

தக்கலை அருகே மின்கம்பத்தில் கார் மோதியது பெண் படுகாயம் அடைந்தார்.

தக்கலை:

இரணியலில் இருந்து தக்கலை நோக்கி நேற்று பகல் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் முத்தலக்குறிச்சி பகுதியில் வரும்போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து காரின் முன்பகுதியில் விழுந்தது. மின் இணைப்பும் தானாக துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் காரின் முன் பகுதியும் நொறுங்கியது.

காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மேல இரணியல் கோணத்தை சேர்ந்த விஜயகுமாரி (வயது 34) என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். காரை ஓட்டி வந்தவர் காயம் எதுவும் இன்றி தப்பினார். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்கம்பத்தில் கார் மோதிய வேகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு