தமிழக செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பூனை

நாகர்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்த பூனை

தினத்தந்தி

நாகர்கோவில், 

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆனந்தன் நகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் சந்தோஸ் குமார். இவருக்கு சொந்தமான கிணறு அப்பகுதியில் உள்ளது. 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 3 அடிக்கு தண்ணீர் உள்ளது. நேற்று அந்த கிணற்றின் தடுப்புச் சுவரில் நின்ற ஒரு பூனை திடீரென கிணற்றுக்குள் விழுந்தது. இதனால் தண்ணீரில் தத்தளித்த பூனை சத்தமிட்டது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி தண்ணீரில் தத்தளித்த பூனையை பத்திரமாக மீட்டனர். பூனையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை அந்த பகுதி மக்கள் பாராட்டினர். மேலும் கிணற்றை முடிவைக்கவும் அதன் உரிமையாளருக்கு தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து