பெகாசஸ் விவகாரம் பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறோம்? என்று பா.ஜ.க.வினர் என்றைக்கு சொன்னார்கள்? புதிதாக பொறுப்பேற்ற மந்திரி, உப்புசப்பு இல்லாமல் ஒரு அறிக்கையை படித்துவிட்டு சென்றாரே தவிர, தேதியை குறிப்பிட்டு பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை விவாதிக்க தயார் என்று என்றைக்காவது சொன்னாரா? சொன்னதே கிடையாது. அவர்கள் விவாதிக்க தயார் கிடையாது. விவாதித்தால் உண்மை வெளிவந்துவிடும் என்று அச்சப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைப்போல தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கூறுகையில், நாடாளுமன்றம் மூலம் கருத்துகள் சொல்ல வாய்ப்பு மறுக்கப்பட்ட நாங்கள் ராகுல்காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், அவர்கள் பேசுவது பதிவாகி மக்களுக்கு போகிறது. நாங்கள் பேசுவது தெரியவில்லை. எனவே, நாடாளுமன்றம் நடக்காமல் போனதற்கு காரணம் ஆளுங்கட்சி அரசாங்கமே தவிர, எதிர்க்கட்சிகள் இல்லை என்றார்.