தமிழக செய்திகள்

"தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது" - திருமாவளவன் குற்றச்சாட்டு

“தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” - திருமாவளவன் குற்றச்சாட்டு

தினத்தந்தி

சென்னை,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"இலங்கை கடற்படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்கவேண்டும். தமிழக முதல்-அமைச்சரும் அழுத்தம் தரவேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு