கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மத்திய அரசு பணி தேர்வுகள் அனைத்தையும் தமிழில் நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

மத்திய அரசு பணி தேர்வுகள் அனைத்தையும் தமிழில் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட தபால் அலுவலகம் மற்றும் ரெயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகள் ஆகியவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடியும் என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, இத்தேர்வுகள் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதினார்.

அதைதொடர்ந்து, தமிழிலும் தேர்வு எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழக தேர்வர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாகும்.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்கிறோம். மேலும் இதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்ற சு.வெங்கடேசனுக்கு பாராட்டுக்கள். இதேபோன்று, மத்திய அரசின் பணி நியமனங்களுக்கான அனைத்து தேர்வுகளையும் தமிழில் எழுதுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து