சென்னை,
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் வழக்கம்போல் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.
அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆதாலால் தமிழகத்தில் கூடுதல் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார்.