தமிழக செய்திகள்

சென்ட்ரல் அருகே சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் இருந்து மங்களூரு வரை இயக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் ரெயில் பணிமனையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் இரு பெட்டிகள் மட்டும் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இதனைக் கண்ட ஓட்டுனர் உடனடியாக ரெயிலை நிறுத்தியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே அதிகாரிகள், தடம்புரண்ட பெட்டிகளுக்கு பதிலாக மாற்று பெட்டிகளை இணைத்து ரெயிலை அனுப்பி வைத்தனர். ரெயில் பெட்டிகள் காலியாக இருந்ததால், இந்த விபத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை