தமிழக செய்திகள்

முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் முதல் பயணம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இருவரும் முதல் முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந் தேதி தேவர் ஜெயந்தியாக கொண்டாடப்படும்.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதே விமானத்தில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினும் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரே விமானத்தில் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் பயணம் செய்ய இருப்பது இதுவே முதல் முறையாகும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது