தமிழக செய்திகள்

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க துணிப்பையுடன் ரெயிலில் புறப்பட்ட தலைமைச் செயலாளர்....!

வேலூரில் இன்று நடக்கவுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தலைமைச் செயலாளர் இறையன்பு ரெயிலில் புறப்பட்டுச் சென்றார்.

தினத்தந்தி

சென்னை,

கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் முதல் அரசுமுறை 2 நாள் பயணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று புறப்பட்டார். இதற்காக அவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பகல் 10.26 மணிக்கு சீரடி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடி சென்றார்.

முதல்-அமைச்சருடன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோரும் முதல்-அமைச்சருடன் ரெயிலில் பயணம் செய்தனர்.

இந்த பயணத்திற்காக தலைமைச் செயலாளர் இறையன்பு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் துணிப்பையை தோளில் தொங்கவிட்டபடி எளிமையாக புறப்பட்டு சென்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்