சென்னை,
நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதினார் என்ற செய்தி மேலும் துயரத்தை தருகிறது.
மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக பா.ஜனதா சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு வருங்காலத்தில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக பா.ஜனதா செய்யும்.
கேரள மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுத சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணம் அடைந்தது மிகவும் வேதனைக்குரியது. எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வால் தமிழகத்தில் இறப்புகள் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். இந்த மாணவர் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவன் தன் தந்தை கிருஷ்ணசாமியோடு நேற்று எர்ணாகுளத்திற்குச் சென்று ஏர்லைன்ஸ் ஓட்டலில் தங்கியிருந்து நீட் தேர்வு எழுதச் சென்றுள்ளார். இதில், ஏற்பட்ட மன உளைச்சலால் அவரது தந்தை கிருஷ்ணசாமி தங்கியிருந்த விடுதியிலேயே மாரடைப்பால் உயிர் நீத்தார்.
இந்தச் செய்தியை அறிந்தவுடன், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனோடு தொடர்புகொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்காததால், கேரளா கவர்னர் சதாசிவத்துக்கு தகவல் கொடுத்தேன். கவர்னர் உடனே ஆவன செய்வதாக கூறினார். எர்ணாகுளம் மாவட்ட கலெக்டருக்கு கவர்னர் தகவல் கொடுத்து, அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
எர்ணாகுளத்தில் உள்ள என் நண்பர்களிடம் கூறி, அம்மாணவனுக்குத் ஆறுதல் கூறி, அவரது தந்தையின் சடலத்தை ஊருக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டுள்ளேன். தந்தையை இழந்து வாடும் மாணவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு தேர்வு எழுத சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது மறைவுக்கு பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்துவதுடன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தன் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை எர்ணாகுளத்துக்கு நீட் தேர்வு எழுத அழைத்துச்சென்ற கிருஷ்ணசாமி, மகனை தேர்வு எழுதுவதற்கு அனுப்பி வைத்து விட்டு வெளியே காத்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் இறந்துள்ளார் என்ற செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த 3 லட்சம் ரூபாய் நிதியுதவி போதாது. எனவே மேற்கொண்டும் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எர்ணாகுளத்துக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற தனது மகனுக்கு துணையாக சென்ற கிருஷ்ணசாமி, கேரளாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது
நீட் தேர்வு எழுத எர்ணாகுளத்துக்கு சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்துக்கு உரியது. தந்தையை இழந்து வாடும் மாணவனின் குடும்பத்துக்கும் த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவனின் கல்விக்கு மட்டும் அல்ல, வருங்கால வாழ்வாதாரத்துக்கும் தமிழக அரசு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.
மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மனஅழுத்தத்தினால் மாரடைப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் மனவேதனையும் அளிக்கிறது. ஏற்கனவே நீட் தேர்வு பிரச்சினையில் கடந்த ஆண்டு அனிதாவை பறிகொடுத்தோம். மக்கள் விரோத பழனிசாமியின் அரசு இன்னும் எத்தனை உயிர்களை பலி கேட்கப்போகிறதோ?
நீட் தேர்வு எழுத சென்ற கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியின் மரணம் எங்களை பெருந்துயரில் ஆழ்த்தி உள்ளது. கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், கொச்சி ஐ.ஜி. விஜய் சக்ஹரே ஆகியோரிடம் தனிப்பட்ட முறையில் பேசி கஸ்தூரி மகாலிங்கம், தன் தந்தையின் உடலுடன் விரைவில் திருத்துறைப்பூண்டி வருவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். மக்கள் நீதி மய்யம் துயருற்ற குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இருக்கிறது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்.
மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் தேர்வு மையங்களை அந்தந்த மாநிலங்களிலேயே அமைத்து தேர்வு நடத்த கண்டிப்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் விவேக்:- ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் மாணவர்களையுமா? இது தகுமா? ஒன்று பணிவோடு கூறுகிறேன். மக்களின் அபிமானம் பெற விரும்புபவர்கள் முதலில் மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற வேண்டும். மாணவர்களின் மன உளைச்சல், பெற்றோரின் பெரும் கோபமாக மாறக்கூடாது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர் அலி, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், கிறிஸ்துவ நல்லெண்ண இயக் கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் சு.ஆ. பொன்னுசாமி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.