தமிழக செய்திகள்

சென்னை ரிப்பன் கட்டிடத்தின் கோபுரத்தில் உள்ள கடிகாரம் 25 நாட்களுக்கு இயங்காது - மாநகராட்சி அறிவிப்பு

கோபுரத்தில் உள்ள கடிகாரத்தின் சில பாகங்கள் பழுதடைந்து இருப்பதை தொழில்நுட்ப பணியாளர்கள் கண்டறிந்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகராட்சியின் தலைமை இடமாக ரிப்பன் கட்டிடம் விளங்கி வருகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த கட்டிடம், 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். இந்த கட்டிடத்தின் கோபுரத்தில் கடிகாரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த கடிகாரத்தின் சில பாகங்கள் பழுதடைந்து இருப்பதை தொழில்நுட்ப பணியாளர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து கடிகாரத்தில் பழுதுகளை சரிபார்க்க உள்ளதாகவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாலும், வரும் 25 நாட்களுக்கு கடிகாரம் இயங்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்