தமிழக செய்திகள்

பணி ஓய்வுபெற்ற தபேதாரை தனது காரில் வழியனுப்பி கவுரவித்த கலெக்டர் - புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்

புதுக்கோட்டையில் பணி ஓய்வுபெற்ற தபேதாரை தனது காரில் கலெக்டர் வழியனுப்பி வைத்து கவுரவித்தார்.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமுவின் தபேதாராக பணியாற்றி வந்தவர் அன்பழகன். இவர் நேற்று முன்தினத்துடன் பணி ஓய்வு பெற்றார். இவர் பல ஆண்டுகளாக தபேதாராக புதுக்கோட்டையில் பணியாற்றி வந்தார். புதுக்கோட்டை, தபேதார், கலெக்டர் கவிதாராமுஇந்த நிலையில் பணி ஓய்வு பெற்ற அவரை கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் வைத்து கலெக்டர் கவிதாராமு சால்வை அணிவித்தும், சந்தன மாலை அணிவித்தும் கவுரவித்தார். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தபேதார் அன்பழகனை, அவரது வீட்டிற்கு தனது காரில் கலெக்டர் கவிதாராமு வழியனுப்ப ஏற்பாடு செய்தார்.

அப்போது தனது காரின் கதவை கலெக்டர் திறந்து, காரில் முன்பக்கம் தான் அமரும் இருக்கையில் அவரை அமர வைத்து கவுரவித்தார். காரின் பின் இருக்கையில் கலெக்டர் அமர்ந்தார். அடப்பன் வயலில் உள்ள வீட்டில் அன்பழகன் இறக்கி விடப்பட்டார். அங்கு அவரது வீட்டில் கலெக்டர் கவிதா ராமு பரிசு பொருட்கள் வழங்கி, விருந்தில் பங்கேற்றார். அப்போது கலெக்டரின் கணவர் ராகுலும் உடன் இருந்தார்.

கலெக்டரின் காரில் தபேதார் வழியனுப்பி வைக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தபேதாரை கலெக்டர் கவுரவித்த நிகழ்வு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு