தமிழக செய்திகள்

காங்கிரஸ் போராட்டத்தில் முழு அளவில் கலந்து கொள்ள வேண்டும்; தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு: காங்கிரஸ் போராட்டத்தில் முழு அளவில் கலந்து கொள்ள வேண்டும் தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது பொதுவாக கூறப்பட்ட ஒரு கருத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தொடுத்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் அதே கோர்ட்டு தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த நிலையில் சூரத் கோர்ட்டு தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசர அவசரமாக ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் முழு அளவில் பங்கேற்க அணி திரண்டு வரும்படி அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை