சென்னை,
ஐகோர்ட்டில், டாக்டர் எஸ்.ரவீந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை பல்கலைக்கழகத்தில் மருத்துவ அதிகாரியாக 2006ம் ஆண்டு நியமிக்கப்பட்டேன். இந்த பதவிக்கான நியமனம், பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு, போட்டி தேர்வு மூலமும், கல்வி தகுதியின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டது. இதில் நான் தேர்வு செய்யப்பட்டேன்.
இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள துணை வேந்தர், எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல், என்னை பணி நீக்கம் செய்து, கடந்த ஆகஸ்டு 28ந் தேதி உத்தரவிட்டார். என்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, பணி நீக்கம் செய்து துணை வேந்தர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.