தமிழக செய்திகள்

பெற்ற மகளை கள்ளக்காதலுனுக்கு இரையாக்கிய கொடூர தாய்..சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

காவலாளி இல்லாத நேரத்தில் அடிக்கடி அந்த நபர் வீட்டுக்கு வந்து அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்துவிட்டு செல்வார்.

சென்னை,

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த காவலாளி வேலை பார்த்து வரும் ஒருவர் மனைவி மற்றும் 20 வயது மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். காவலாளி தான் வேலை பார்க்கும் இடத்தில் தங்கி வேலை பார்த்து வருவதால் வாரம் ஒருமுறை மட்டுமே அவர் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

இதற்கிடையே காவலாளியின் மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவலாளி இல்லாத நேரத்தில் அடிக்கடி அந்த நபர் வீட்டுக்கு வந்து பெண்ணிடம் உல்லாசமாக இருந்துவிட்டு செல்வார். தாயின் நடத்தை பற்றி தெரிந்தும் அவரிடம் பேசுவதை மகள் தவிர்த்து வந்தார்

இந்தநிலையில் கடந்த 3-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு தாய் தூக்க மத்திரை வாங்கி கொடுத்தார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அசந்து தூங்கி விட்டார். மகள் அசந்து தூங்கும் நேரத்தில் கள்ளக்காதலனுக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்தார் அந்த பெண். வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன் அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துள்ளான். பின்னர் மகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் கண்விழித்து பார்த்தபோது தன்னை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தாயிடம் கேட்டபோது எல்லாம் சரியாகி விடும் என்றார்.

இந்தநிலையில் கடந்த 23-ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளுக்கு தாய் மீண்டும் தூக்க மாத்திரை கொடுத்தார். இதனால் அவர் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? என்பது போல கள்ளக்காதலன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அசந்து தூங்கிகொண்டிருந்தபோது உடலில் ஏதோ ஊறுவதுபோல இருந்தது இளம்பெண்ணிற்கு திடீரென எழுந்தபோது பக்கத்தில் தாயின் கள்ளக்காதலன் தான் தம்மிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்து கூச்சலிட்டார். இதனையடுத்து மகளை கண்டித்த தாய் இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்று கூறி அறையில் வைத்து பூட்டினார்.

எனினும் தாயின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இந்தநிலையில் பெற்ற மகள் என்றும் பாராமல் தூக்க மாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலனுக்கு இரை ஆக்கிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இளம்பெண் வடபழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே பெற்ற மகளை தனது கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.