சென்னை,
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருவதற்கு தமிழக ஆளுநர் காலதாமதம் செய்ததால் தமிழக அரசு கலந்தாய்வு பணியைத் தொடங்க முடியாமல் இருந்துவந்தது. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 18-ம் தேதிக்கு முன்பாக முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு நாட்களில் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.