தமிழக செய்திகள்

தீபாவளி மறுநாள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை

தீபாவளிக்கு அடுத்த நாள் (திங்கள்கிழமை) விடுமுறை என கோயம்பேடு சிறு மொத்த காய்கறி சங்கம் அறிவித்துள்ளது

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தீபாவளியை கொண்டாடிவிட்டு அடுத்தநாளே அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்வதில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான 13ம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தீபாவளிக்கு அடுத்த நாள் (திங்கள்கிழமை) விடுமுறை என கோயம்பேடு சிறு மொத்த காய்கறி சங்கம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்