தமிழக செய்திகள்

ஊராட்சி தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஊராட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், கூடுதல் அதிகாரம் வேண்டும், 100 நாள் வேலைக்கான பணி ஆணைகளை வழங்க அதிகாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சித்தலைவர்கள் கூட்டமைப்பு சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளது.

ஜனநாயகத்தின் வேரான உள்ளாட்சிகள் வலிமையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுப்பெறும். அப்போது தான் காந்தியடிகள் கண்ட கிராம சுயராஜ்யத்தை அடைய முடியும். இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது