தமிழக செய்திகள்

ஆட்டோ மோதி காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய டி.ஜி.பி...!

சென்னையில் ஆட்டோ மோதி காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு நேரில் சென்று டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆறுதல் கூறியனார்.

தினத்தந்தி

போரூர்,

சென்னை சாலிகிராமம் காந்தி நகர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் சப்-இன்ஸ்பெக்டர் இவர் தற்போது நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

பொன்ராஜ் நேற்று இரவு கிண்டி-போரூர் டிரங்க் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை அவர் மடக்கினார். ஆனால் அதிவேகமாக வந்த ஆட்டோ பொன்ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட பொன்ராஜ்க்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற பொன்ராஜ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு விபத்தில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வீட்டிற்கு

வந்தார்.

பின்னர், பொன்ராஜ்க்கு ஆறுதல் கூறிய டி.ஜி.பி சைலேந்திரபாபு, அவருக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அவரது மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்