தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

58 குடியிருப்புகள்

காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியம், விப்பேடு ஊராட்சி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி குண்டுகுளத்தில் ரூ.2 கோடியில் பழங்குடியினருக்காக கட்டப்பட்டு வரும் 58 குடியிருப்புகளை ஆய்வு செய்தார்.

இதைபோல பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு செல்வதற்கு ரூ.10 லட்சத்தில் சிறுபாலம் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வளத்தோட்டம் ஊராட்சியில் ரூ.65.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வளத்தோட்டம் சாலையினை பார்வையிட்டார்.

பள்ளியில் ஆய்வு

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் 2022-2023 திட்டத்தின்கீழ், வளத்தோட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி, கற்றல் திறனை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்