தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 21-ந்தேதி(இன்று) காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, தி.மு.க.வில் நாடாளுமன்ற மக்களவையில் 38 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த எம்.பி.க்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?, என்னென்ன பிரச்சினைகளை எழுப்பவேண்டும்? என்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்