தமிழக செய்திகள்

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வேலூரில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக சாலையில் வசித்து வருபவர் முகமது (வயது 26).

இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். முகமது கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றார்.

மறுநாள் காலை வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு அறைகளில் ஆங்காங்கே துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வைர மோதிரம், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு முகமது மற்றும் அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு