தமிழக செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே மீன் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

அஞ்சுகிராமம் அருகே மீன் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

அஞ்சுகிராமம்,:

அஞ்சுகிராமம் அருகே மீன் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மீன் வியாபாரி

அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தை சேர்ந்தவர் தாம்சன், மீன் வியாபாரி. இவருடைய மனைவி ஜெமிஷா. இவர்கள் கடந்த 13-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

அங்கிருந்து நேற்று முன்தினம் தாம்சன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

நகை-பணம் கொள்ளை

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாம்சன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் வைத்து இருந்த தங்கச்சங்கிலி, தங்க வளையல், 2 மோதிரங்கள் என 3 பவுன் நகை, 20 கிராம் வெள்ளிக்கொடி மற்றும் ரூ.31 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

போலீஸ் தேடுகிறது

இதுகுறித்து ஜெமிஷா அஞ்சுகிராமம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளையில் துப்பு துலக்க சப்-இன்ஸ்பெக்டர் கதிரேஷன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு