தமிழக செய்திகள்

பாலத்தில் இருந்து விழுந்து டிரைவர் பலி

வேடசந்தூர் அருகே பாலத்தில் இருந்து விழுந்து டிரைவர் பலியானார்.

வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோட்டை சேர்ந்தவர் அல்லிமுத்து (வயது 38). இவர் கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சாலையூர் நால்ரோடு அருகே உள்ள தரைப்பாலத்தின் கீழ் பகுதியில் அல்லிமுத்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அவருடைய உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

போலீஸ் விசாரணையில், அல்லிமுத்து பாலத்தின் மீது அமர்ந்து இருந்தபோது தவறி கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி