தமிழக செய்திகள்

வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; டிரைவர் பலி

கிருஷ்ணகிரியில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் டிரைவர் இறந்தார்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி அருகே நேற்று முன்தினம் மதியம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அவதானப்பட்டியில் கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தங்கும் விடுதி அருகே சென்ற போது, எந்த சிக்னலும் போடாமல் லாரியை டிரைவர் திடீரென்று நிறுத்தினார். அதேநேரத்தில் லாரியின் பின்னால் வந்த சொகுசு கார், அதன் பின்னால் வந்த சரக்கு வேன் ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், சரக்கு வேனை ஓட்டி சென்ற திருவண்ணாமலை மாவட்டம், சேவூரை சேர்ந்த முரளி (வயது 40) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்