தமிழக செய்திகள்

லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

திருச்செங்கோட்டில் லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

எலச்சிபாளையம்

எடப்பாடி போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 50). டிரைவர். இவர் சங்ககிரியில் இருந்து தோக்கவாடிக்கு மண் லோடு ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி கந்தசாமி நகர் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் பாண்டியன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அங்கு வந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் டிரைவர் பாண்டியன் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்