தமிழக செய்திகள்

அரசியல் சட்ட பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்; மு.க. ஸ்டாலின்

அரசியல் சட்ட பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினத்தந்தி

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் இடைத்தேர்தல் நடத்துவதற்கு கூட சட்டப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 3 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையுத்தரவு எதுவும் இல்லாத நிலையிலும் தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை ஒத்தி வைத்துள்ளது.

தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் 3 வருடங்களுக்கு மேல் உள்ள மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் மாற்ற வேண்டும்.

கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவதில் தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் வரலாறு காணாத வகையில் பாரபட்சமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் செயல்படுகிறது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்