தமிழக செய்திகள்

போலி டாக்டர் கைது 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்தியவர்

10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தலைமை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் மாறன். இவர், நேற்று ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே இயங்கி கொண்டு இருந்த சுபா கிளினிக்கில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் விசாரித்தபோது, அவர் சுபல்குமார் மண்டல் (வயது 42) என்றும், மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், தற்போது ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சுபல்குமார் மண்டல், கடந்த 15 வருடங்களாக அதே இடத்தில் கிளினிக் நடத்தி வருவதாகவும் தெரியவந்தது.

10-ம் வகுப்பு வரை படித்து எப்படி சிகிச்சை அளிக்கலாம்? என்று டாக்டர் மாறன் அவரிடம் கேள்வி கேட்டார். இதையடுத்து சுபல்குமார் மண்டல் அங்கிருந்து சென்று விடவே, டாக்டர் மாறன் இதுபற்றி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் சுபல்குமார் மண்டலை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்