கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்த நடிகர் சிவக்குமார் குடும்பம்

கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதியுதவி அளித்தனர்.

சென்னை,

கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளாகளுக்கு முதல்-மந்திரி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தினர் சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சிவகுமார், கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவுவதற்காக தங்களால் முடிந்த நிதியை அளித்ததாகவும், கொரோனா தொற்றிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு