தமிழக செய்திகள்

விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திருத்துறைப்பூண்டி;

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்த போலீசாரை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் திரு ஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.விவசாயிகளை கைது செய்த போலீசாரை கண்டித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்