தமிழக செய்திகள்

மதுரை மத்திய சிறையில் கைதிகள், போலீசார் இடையே கடும் மோதல்

மதுரை மத்திய சிறையில் கைதிகள், போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மதுரை,

மதுரை மத்திய சிறையில் கைதிகள் மற்றும் போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. சிறையில் உள்ள கட்டிடத்தின் மீது ஏறி நின்று கைதிகள் போராட்டம் நடத்தினர்.

காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி, சட்டைகளை களைந்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் மீது கைதிகள் கற்களை கொண்டு வீசினர் என கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

கைதிகளை கீழே இறங்கும்படி கூறி அவர்களிடம் காவல் துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். கைதிகளின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு