தமிழக செய்திகள்

நடிகர் ரவிமோகன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியீடு

நடிகர் ரவிமோகன் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்க உள்ளார். அதில், முதல் படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் அவரே நடிக்க உள்ளார். இரண்டாவதாக யோகி பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி தயாரிக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் ரவிமோகன் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், 'கராத்தே பாபு' படக்குழு நடிகர் ரவிமோகனுக்கு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு