தமிழக செய்திகள்

ஆம்பூர் தோல் குடோனில் 2-வது நாளாக பற்றி எரிந்த தீ

ஆம்பூர் தோல் குடோனில் 2-வது நாளாக பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் எம்.வி சாமி பகுதியில் உள்ள தோல் குடோனில் நேற்று தீ விபத்து ஏற்ப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து ஆம்பூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென எரிந்தால் தீயை கட்டுப்படுத்த முடியாமால் வீரர்கள தவித்தனர்.

இதனை தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயை ஒர் அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் தீ பற்றி எரிய தொடங்கி உள்ளது. இதனை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவந்தனர்.

தற்போது தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோல் குடோனில் இரண்டு நாட்களாக பற்றி எரிந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவரும் புகை சூழ்ந்து காணப்படுகின்றது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு