தமிழக செய்திகள்

"பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவு" - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பேனா நினைவுச் சின்னத்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி என்பது இரண்டு கட்டங்களாகும்.  முதல்கட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் முதல்-அமைச்சர் அனுமதி பெற்று விரைவில் தொடங்கும்.

கடலில் பேனா சின்னம் அமைக்க மதிப்பீடு எதுவும் தயார் செய்யப்படவில்லை. இப்போது கடற்கரையில் கருணாநிதி நினைவிட கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்