தமிழக செய்திகள்

புதிய கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா

புதிய கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

தினத்தந்தி

காரைக்குடி

காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட கணபதிபுரம் பகுதி மக்கள் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் அப்பகுதியில் கலையரங்கம் அமைக்க வண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் ராதாபாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அமராவதிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா வரவேற்றார். மாங்குடி எம்.எல்.ஏ. புதிய கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அபிராமிவீரப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், காங்கிரஸ் வட்டார தலைவர் கருப்பையா மற்றும் தி.மு.க, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்