தமிழக செய்திகள்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டிருப்பதாவது:-

"தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய தினம் கவர்னர் உரையில் தமிழக அரசு பல்வேறு துறைகளில் மக்களுக்கான வருங்கால திட்டங்களை விளக்கி இருக்கிறது. அதனை அரசு ஒரு காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்.

தற்பொழுது கொரோனா தொற்றால் நாடும் நாட்டு மக்களும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். இந்த இழப்பை எப்படி சரிகட்டுவது, நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது எப்படி, மக்களின் வாழ்வாதாரத்தை காத்து அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்று எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் தெளிவுப்படுத்தவில்லை.

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்துகிறது".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்