‘கஜா’ புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் 4 நாட்களாக கிராம மக்கள் தவிப்பு
கஜா புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் கடந்த 4 நாட்களாக கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். எனவே நிவாரண பணிகளை மேலும் தீவிரப் படுத்துமாறு அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
தஞ்சை,
கஜா புயல் தாக்குதலால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.