தமிழக செய்திகள்

தவறி விழுந்து பெண் சாவு

தேனி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக பலியானார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சொக்கநாடு எஸ்டேட்டை சேர்ந்த செல்வராஜ் (வயது 66). அவரது மனைவி மஸ்தா (62). கடந்த 28-ந்தேதி செல்வராஜ், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கோட்டூரிலிருந்து பெரியகுளத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அன்னஞ்சி விலக்கு என்னுமிடத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து மஸ்தா எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஸ்தா இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT