சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தி(வயது 45). இவர், வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென சாந்தியின் காதில் கிடந்த ஒரு பவுன் தங்க கம்மலை பறித்துச்சென்றனர். இதில் அவரது காது அறுந்ததால் ரத்தம் கொட்டியது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர், இதுபற்றி வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.