சிதம்பரம்
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரளாவை போன்று தமிழகத்தில் மழை பெய்தால் அதை சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது. ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு உள்ளது.
அதிக மழையால் வெள்ளம் ஏற்படுகிறது, இயற்கை சீற்றத்தை தடுக்க முடியாது. ஏரிகள் தூர்வாரும் பணி நடைபெறுவதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மக்கள் வரவேற்கும் திட்டத்தை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மத்திய அரசு சொல்லும், எல்லாத்துக்குமே தமிழக அரசு தலையாட்டாது; எதை எதிர்க்க வேண்டுமோ அதை இந்த அரசு எதிர்க்கும் .என கூறினார்.