தமிழக செய்திகள்

7 பேரை விடுதலை செய்வதற்கான கோப்பில் கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக கவர்னர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. கவர்னரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக கவர்னர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து கவர்னர் மாளிகை முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். கவர்னர் 4 நாட்களில் சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும்.

பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தால் அது கவர்னர் மாளிகைக்கு அவப்பெயர் தேடித்தரும். அந்த நிலையைத் தவிர்த்து கவர்னர் மாளிகையின் மாண்பை காக்க பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்